Posts

சங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் (ஐந்திணை, ஐந்நிலம், ஐந்து ஒழுக்கங்கள்

சங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் ( ஐந்திணை , ஐந்நிலம் , ஐந்து ஒழுக்கங்கள் )      தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும் . திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை . தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள படி , மொழியியல் திணைகள் ,   உயர்திணை மற்றும் அஃறிணைகளாகப் பிரிக்கப்படுகின்றன . பொருளியல் திணைகள் , அகத்திணை மற்றும் புறத்திணைகளாகப் பிரிக்கப்படுகின்றன . பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை , புறத்திணை எனும் இரு வகைகளுக்குள் அடங்குகின்றன .       திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள் . பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை திணை என்றார்கள் . புறத்திணை -   அகத்திணை :     புறத்திணை - பழந் தமிழர் வாழ்வியலில் போர் , அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது . மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது அகத்திணை - ஓர் ஆணும் , பெண்ணும் காதலால் இணைந்து தமக்கு...