கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள்
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு மற்றும் சோர்வு அடிக்கடி ஏற்படும். அதிலும் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு சோர்வு ஒரு பெரும் தொந்தரவாக இருக்கும். ஏனெனில் விரும்பிய படி எதையும் செய்ய முடியாதவாறு இருக்கும். எப்போது பார்த்தாலும், சோம்பேறித்தனமாக, மயக்க நிலையில், உடலில் சக்தியின்றி சோர்வுடன் இருக்க நேரிடும். பெரும்பாலும், இந்த பிரச்சனை முதல் மூன்று மாதங்களிலும், இறுதி மூன்று மாதங்களிலும் தான் இருக்கும். அதிலும் முதல் மூன்று மாதங்களில் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் அதிகப்படியான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு போன்றவை சோர்வை ஏற்படுத்துகின்றன. மேலும் இறுதி மூன்று மாதத்தில் ஏற்படுவதற்கு அதிகப்படியான உடல் எடை தான். அதுமட்டுமல்லாமல் முதுகு வலி, போதிய தூக்கமின்மை, தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவையும் ஏற்படுவதால், விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடுகிறது. எனவே கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன் கவனமாகவும், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அவ்வப்போது சிறு உட...