Posts

அர்த்தமுள்ள இந்துமதம் - 2

அர்த்தமுள்ள இந்துமதம் - 2 அர்த்தமுள்ள இந்து மதத்தைப் பற்றி எழுதுவதன் முக்கிய நோக்கம் , அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே . எந்த வித மதம் சார்ந்த கருத்துக்களையும் முன்வைத்துக் கூறப்படவில்லை .  மனித வாழ்க்கையின் நிலைகளையும் அதன் தத்துவங்களையும் இந்து மதம் எவ்வாறு விளக்குகிறது ? உதாரணமாக இந்து மத இதிகாசங்கள் அனைத்திலும் இரண்டு (extreme) நிலைகள் அல்லது துருவங்களைக் காணலாம் . மகாபாரதத்திலும் , ராமாயணத்திலும் நல்லவர்கள் ஒரு பிரிவாகவும் , கெட்டவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருப்பது ஏன் ? எதனை முன்னிருத்த இத்தகைய கதைகள் கூறப்பட்டிருந்தன .  அறுபது மனைவிகளைக் கொண்ட த ‌ சரதனை ஏன் சித்தரித்தனர் ? மனித வாழ்வில் இது சாத்தியமா ? அப்படி வாழலாமா என்கிற கேள்விகளை விட , அவனது மகன் ராமனை ஏகப்பத்தினி விரதன் என்றார்கள் . இரண்டையும் இரண்டு துருவங்களாக்கிக் காட்டினார்கள் . இரண்டு வாழ்க்கையிலே எந்த வாழ்க்கை சரி ? எது நியாயம் என்பதை அவர்கள் போதிக்க வரவில்லை ! அந்த வாழ்க்கைய...

பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)

Image
பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை) மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .  பாடலுக்குச் செல்லும் முன் அப்பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது.   பாலை நிலப்பரப்பானது  ` முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம்  ( வறண்ட நிலம் )’; ` பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ’  பற்றிக் குறிப்பிடுவது .  காதலரிடையே  ' பிரிவும் ,  பிரிதல் நிமித்தமும் '  ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும் . குறுந்தொகைப் பாடல்  எண்  -   27 ஆசிரியர்  -  வெள்ளிவீதியார் திணை - பாலைத்திணை தலைவியின் கூற்று   –  பிரிவிடை  '' ஆற்றாள் ''  எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து ,  மனதில் துயரம் குடிகொண்டதோடு ,  பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில்...

தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம்

தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் எனக்கு இவ்வலைபூவை புதுப்பிக்க நேரம் கிடைத்திற்று . வாசகர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு / சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் . சமீபத்தில் இணையதளத்தில் உலாவும்போது ' அர்த்தமுள்ள இந்துமதம் ' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒலிப்பேலை (mp3 audio file) கிடைத்தது .   சிறுவயதில் எனது அப்பா இப்புத்தகத்தை படித்தது இன்றும் நினைவில் உள்ளது . இதில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும் , அதன் சிறப்பைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் .   சிறு வயதில் நான் எனது அம்மாவிட ‌ ம்   அடிக்கடி கேள்விகள் கேட்பது வழக்கம் . அத்தகைய தருணங்களில் அதிக தடவை எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை . உதாரணமாக எதற்காக குங்குமமும் , திருநீரும் இடுகிறோம் ? ஏன் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருவது வழக்கமாக உள்ளது ? இதுபோன்ற எண்ணற்ற மதம் சார்ந்த கேள்விகளுக்கு , ஆராய்ந்து தனது பதிலை கவிஞர் இதில் குறிப்பிட்டுள்ளார் . ...